search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்க்கும் கூட்டம்"

    • மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெறவுள்ளது.
    • அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல பிரதிநிதிகளும் தவறாது கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 11-ந் தேதி காலை 11 மணியளவில் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் வட்டங்களுக்குட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் நல பிரதிநிதிகளும் தவறாது கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    • செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சியில் நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறவில்லை.
    • 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கலெக்டர் சங்கீதாவிடம் கொடுத்தனர்.

    மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தனம், ஜெயலட்சுமி, ஜெயக்கொடி, பஞ்சு, தங்கசாமி, பாண்டியராஜன் ஆகியோர் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் சங்கீதாவை சந்தித்து தாங்கள் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து கோவிலாங் குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் கலெக்டர் விளக்கம் கேட்டார். அவர்கள் ஊராட்சியில் வெளிப்படை தன்மை இல்லை எனக்கூறி ராஜினாமா செய்வதாக தெரிவித்தனர்.

    ராஜினாமா கடிதம் கொடுத்த பின்பு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நிருபர்களிடம் கூறியதா வது:-

    செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சியில் நிர்வாகம் வெளிப்படையாக நடைபெறவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து கேட்டால் உரிய பதில் இல்லை. வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார்கள். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனை கண்டித்து நாங்கள் ராஜினாமா கடிதத்தை கலெக்டரிடம் கொடுத்துள்ளோம். அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறறும்.
    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டத்தில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆணையாளர் தலைமையில் சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டு பகுதிகளில்சொத்து வரி, குடிநீர் வரி, திடக்கழிவு மேலாண்மை கட்டணம் போன்ற இதர வரிகள் பொதுமக்களால் செலுத்தப்பட்டு வருகிறது.

    மேற்கண்ட வரிகள் குறித்து பொதுமக்கள், வியாபாரிகள், தொழிற்கூடஉரிமையாளர்கள் ஆகியோர் வழங்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில்ஆணையாளர் தலைமையில் துணை ஆணையர், உதவி ஆணையர், துப்புரவுஅலுவலர்கள், துப்புரவு ஆய்வாளர்கள், சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் கொண்ட குழுஅமைக்கப்பட்டுள்ளது. மேற்படி குழுவின் கூட்டம் பிரதி மாதம் இரண்டாம் மற்றும் நான்காம் வியாழக்கிழமைகளில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதன்படி கடந்த (8.6.2023) அன்று நடைபெற்ற கூட்டத்தில் நான்குமண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளிலிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விதிமுறைகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    எனவே பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காம் வியாழக்கிழமைகளில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெறும் கட்டண குறைதீர்க்கும் கூட்டத்தில் தங்களது மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.மேலும் தகவல்களுக்கு 9843174448 என்ற செல்போன் எண்னை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • 28 -ம் தேதி கோயம்புத்தூர் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது.
    • நுகர்வோர் தபால் துறையில் குறைகள் இருப்பின் கடிதம் மூலம் தெரிவிக்கலாம்.

    தருமபுரி,

    தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    மண்டல அளவிலான அஞ்சல் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 28 -ம் தேதி கோயம்புத்தூர் காந்தி புரத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் நடைபெற உள்ளது.

    நுகர்வோர் தபால் துறையில் குறைகள் எதுவும் இருப்பின் கடிதம் மூலம் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். நுகர்வோர் தங்கள் மனு சார்ந்த அனைத்து விவரங்களையும் தெளிவாக குறிப்பிட்டு உறையின் மேல் மக்கள் குறை தீர் கூட்டம் என குறிப்பிட்டு உதவி இயக்குனர், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலகம், கோவை என்ற முகவரிக்கு அனுப்பவேண்டும் என அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

    • மதுரை அருகே மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • இந்த தகவலை மதுரை தெற்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை பவர் ஹவுஸ் ரோட்டில் உள்ள தெற்கு மின் அலுவலகத்தில் நாளை 15-ந்தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சுப்பிரமணியபுரம் ஆரப்பாளையம் தமிழ் சங்கம் ரோடு, யானைக்கல், டவுன்ஹால் ரோடு, மீனாட்சி அம்மன் கோவில், மாகாளிப்பட்டி, மஹால், அரசமரம், தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களின் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து தீர்வு காணலாம்.

    இந்த தகவலை மதுரை தெற்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை கூட்டம் நடக்கிறது.
    • மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறை நிறைகளை கூறலாம்.

    திருப்பூர் :

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே அவினாசியை சுற்றியுள்ள மின்நுகர்வோர் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரில் மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலையில் 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் கலந்து கொள்கிறார். எனவே மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தொழில் முனைவோர் கலந்து கொண்டு கூட்டத்தில் குறை நிறைகளை கூறலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • திருமங்கலத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (13-ந் தேதி) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறை களை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    • மதுரை சமயநல்லூர் கோட்டத்தில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்தை சார்ந்த மின்நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை (1-ந் தேதி) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சமயநல்லூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் சமயநல்லூர் கோட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு குறைககளை தெரிவிக்கலாம்

    மேற்கண்ட தகவலை மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    • தொண்டியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
    • இந்த மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் நிலை பேரூராட்சியில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் செவ்வாய்க்கிழமையும், இறுதி வார செவ்வாய்க்கிழமையும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மக்கள் குறை தீர்க்கும் நாளாக முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி நடந்த குறை தீர்க்கும் முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் தங்களது பகுதி குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி பேரூராட்சி மன்ற தலைவரிடம் மனுக்களாக அளித்தனர்.

    இந்த மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் உடனிருந்தார்.

    • தொழிலாளர் வைப்புநிதி குறித்த விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • நிறுவனங்களும் தங்களுடைய வைப்புநிதி தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மண்டல தொழி லாளர் வைப்புநிதி ஆணை யாளர் வீரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் உள்ள சக்தி சர்க்கரை ஆலை கலையரங்கத்தில் நாளை (29-ந் தேதி) தொழிலாளர் வைப்புநிதி குறித்த விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

    காலை 9.30 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை இந்த கூட்டத்தில் தொழிலாளர் வைப்பு நிதி சந்தாதாரர்களும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தொழில திபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களும் தங்களுடைய வைப்புநிதி தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறஉள்ளது.
    • வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×